×

₹75 லட்சத்தில் சீரமைத்த விழுப்புரம் நகராட்சி பூங்கா பொலிவிழந்து கிடக்கும் அவலம்

*பொதுமக்கள், சிறுவர்கள் ஏமாற்றம்விழுப்புரம் :  விழுப்புரம் நகராட்சியின் அடையாளமாக விளங்குவது நகராட்சி பூங்கா. 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பூங்கா நாளடைவில் முறையான பராமரிப்பில்லாமல் இருந்து வந்தது. நகரிலுள்ள 42 வார்டு பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் விளங்கி வந்தது. சிறுவர்கள் விளையாட்டு திடல், நடை பயிற்சி கட்டைகள், நீரூற்று என அனைத்து சிறப்பம்சங்களும் இருந்துவந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூகவிரோதிகளின் கூடாரமாக விளங்கியது. சாராய விற்பனை முதல் சூதாட்டம் வரை அனைத்து சமூக விரோத செயல்களும் நடந்து வந்தது.  பின்னர் அப்போதைய அதிமுக நகரமன்றத்தலைவராக இருந்த பாஸ்கரன் பூங்காவை சீரமைக்க ரூ.25 லட்சம் நிதிஒதுக்கீடு செய்து,‘ இப்பூங்கா புனரமைக்கப்பட்டது. நடைபயிற்சி கட்டைகள் அகற்றப்பட்டு புதிய கட்டைகள் போடப்பட்டது. மேலும் பூங்காவை பராமரிக்க ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். பணிகளை ஒப்பந்தம் எடுத்த நபர் சரியாக செய்யாததால் சிலமாதங்களிலேயே கட்டைகள் பெயர்ந்தன. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பூங்காவை சீரமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியில், பூங்காவை சுற்றியுள்ள சுவர்களை இடித்துவிட்டு இரும்பு கம்பிகள் அமைப்பது, நடைபயிற்சி கட்டைகளை அமைப்பது, விளையாட்டு திடல், நீரூற்று என மீண்டும் அந்த பணிகளே நடந்தன. இந்தப்பணிகளையும், அதிமுகவைச் சேர்ந்த நபருக்கே ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகளை செய்து முடித்துவிட்டுச் சென்றார். சிலஆண்டுகள்கூட தாக்குபிடிக்காமல், தரமற்ற பணிகளால் நடைபயிற்சி செல்லும் கட்டைகள் பல இடங்களில் பெயர்த்துக்கொண்டும், அங்கு பொருத்தப்பட்ட இரும்பு சேர்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக, சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட நீரூற்றுகள், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உடைந்த நிலையில் உள்ளது.தற்போது கொ ரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததாலும், பொருட்கள் உடைந்து காணப்படுவதால் பொதுமக்கள், சிறுவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிசெல்கின்றனர். மேலும், நடைபயிற்சி செல்லும் கட்டைகளும் உடைந்து காணப்படுவதால், நடைபயிற்சி செல்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நகராட்சி பூங்காவை புனரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது….

The post ₹75 லட்சத்தில் சீரமைத்த விழுப்புரம் நகராட்சி பூங்கா பொலிவிழந்து கிடக்கும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Viluppuram Municipal Park ,Viluppuram Municipality ,Ipoonka ,
× RELATED விழுப்புரம் நகராட்சி 37வது வார்டில்...