×

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சேதமடைந்த பாதாள சாக்கடை பணிகள் சீரமைப்பு… அதிகாரிகள் நடவடிக்கை..!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் சரியாக நடைபெறாததால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாவதாக சன் நியூஸில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருமங்கலம் நகராட்சி 20வது வார்டில் உள்ள உத்தண்டன் தெருவில்  பாதாள சாக்கடை பணிகளுக்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியாவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து சன் நியூஸில் செய்தி வெளியானதால் அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அப்பகுதி மக்கள், சாலை பணிகளை விரைவாக முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சேதமடைந்த கழிவுநீர் குழாய் 165 மீட்டர் தூரம் அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்காக ஆறரை லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் வருகின்ற 26ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சேதமடைந்த பாதாள சாக்கடை பணிகள் சீரமைப்பு… அதிகாரிகள் நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai District Thirumangalam ,Madurai ,Madurai District ,Thuramangalam ,Sun News ,Thirumangala ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்