×

விஜய்யை இயக்குவது எப்போது?: ஆர்ஜே பாலாஜி

சென்னை: விஜய்யிடம் கதை சொல்லியிருக்கும் நடிகர் ஆர்ஜே பாலாஜி, அவரை எப்போது இயக்குவது என்பது குறித்து பதிலளித்தார். அது வருமாறு: ‘எல்கேஜி’ படத்தில் நடித்தபோது, எனது அடுத்தடுத்த படங்களில் அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், கல்வி போன்ற சப்ஜெக்ட் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த வரிசையில் ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களில் நடித்தேன். இப்போது ‘ரன் பேபி ரன்’ படம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ளது. எனது, ஜோடியாக இஷா தல்வார், முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்  நடித்துள்ளனர்.

கண்ணியமான காதல் காட்சிகள் இருக்கும். செங்கல்பட்டு, செஞ்சி, மதுராந்தகம், வாலாஜா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு வரை, யார் குற்றவாளி என்று யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும். சினிமாவில் யாரையும் நான் போட்டியாக நினைக்கவில்லை. மக்களாக கொடுக்காமல், எனக்கு நானே ஸ்டார் பட்டம் போட்டுக்கொள்வது பிடிக்காது.

கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி நான் சொன்ன கதையை விஜய் கேட்டார். 40 நிமிடங்கள் சொன்னேன். வாய்விட்டுச் சிரித்துவிட்டு, ‘உறுதியாகவும், நன்றாகவும் இருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கலாமா?’ என்று கேட்டார். ‘வீட்ல விசேஷம்’ படத்துக்கே 5 மாதங்களானது. உங்களை இயக்க தயாராவதற்கு குறைந்தது ஒரு வருட காலமாவது வேண்டும் என்றேன். அவரும், சரி என்றார். இதற்கிடையே அவருக்கு ஏற்ற கதை தோன்றினாலும் சொல்வேன். ஆனால், அவரிடம் சொன்ன கதை அவருக்கு மட்டும்தான். வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன்.

Tags : Vijay ,RJ Balaji ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch