டிவி நடிகரை காருக்குள் முத்தமிட்ட ஷில்பா தங்கை

மும்பை: டிவி நடிகர் அமீர் அலியும், நடிகை ஷமீதா ஷெட்டியும் டேட்டிங்கில் இருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அவர்கள் தாங்கள் டேட்டிங்கில் இல்லை என்று பதிவிட்டுள்ளனர். கடந்த 2002ல் தமிழில் மனோஜ் குமார் இயக்கத்தில் விஜயகாந்த், மலையாள நடிகர் திலீப், பிரியங்கா திரிவேதி இணைந்து நடித்த ‘ராஜ்ஜியம்’ என்ற படத்தில் ஷமீதா ஷெட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா மற்றும் டி.வி நடிகர் அமீர் அலி, நடிகை சஞ்சிதா ஷேக் என்பவரை கடந்த 2012ல் திருமணம் செய்தார். பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து செய்தார்.

இத்தம்பதிக்கு அய்ரா அலி என்ற மகள் உள்ளார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமீதா ஷெட்டியும், அமீர் அலியும் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் சந்தித்தனர். அப்போது அவர்கள் காருக்குள் நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்டிருந்த போட்டோ மற்றும் வீடியோ வெளியானது. இதனால், அவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு நடிகர் ராகேஷ் பாபத்தும், ஷமீதா ஷெட்டியும் டேட்டிங்கில் இருந்ததாகவும், பிறகு அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அமீர் அலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எப்போதும் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று என் தாய் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அந்தவகையில் அவரை (ஷமீதா ஷெட்டி) எனது காருக்குள் அழைத்துச் சென்றேன். அவருடன் நான் நல்ல நண்பனாகப் பழகி வருகிறேன். மற்றபடி எங்களுக்கு இடையே எதுவும் இல்லை. தற்போது வரை நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல் ஷமீதா ஷெட்டி வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த சமூகமே இப்படித்தான். உண்மை என்னவென்று தெரியாமல், எதற்காக இப்படி பொய்ச் செய்திகளை பரப்புகின்றனர் என்று தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருங்கள். நாட்டின் மிக முக்கியமான பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்துவோம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: