×

ஒரே மாதத்தில் இந்தியர்களின் 20 லட்சம் கணக்கு முடக்கம்: வாட்ஸ் அப் தகவல்

புதுடெல்லி: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்ப விதிகளை ஒன்றிய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதள நிறுவனங்கள் மேற்கண்ட விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. இந்த சட்டங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் புதிய தொழில்நுட்ப விதிகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பேஸ்புக், இந்தியாவில் மே 15 முதல் ஜூன் 15ம் தேதி வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், சமூக தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, மேலெழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மே 15 முதல் ஜூன் 15 வரையிலான ஒரு மாத காலத்தில்  345 புகார்கள் பெறப்பட்டன.  20 லட்சம்  இந்தியர்களின் கணக்குகளை தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தனது புதிய தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள பயனாளர்களை வலியுறுத்த மாட்டோம் என வாட்ஸ்அப் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஒரே மாதத்தில் இந்தியர்களின் 20 லட்சம் கணக்கு முடக்கம்: வாட்ஸ் அப் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,WhatsUp ,New Delhi ,Union government ,Indians ,WhatsApp ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி:...