சிங்கிள் ஷாட் படத்தில் ஹன்சிகா

ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள படம், ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’. இப்படம் சிங்கிள் ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ருத்ரன்ஸ் செலுலாய்ட்ஸ் சார்பில் பொம்மக் சிவா தயாரித்துள்ளார். ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், ஒரு மணி நேரம், 45 நிமிடங்கள் ஓடும். அதாவது, 105 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை ஒரே ஷாட்டில், மிகவும் சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டு படமாக்கியுள்ளனர். இது சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ளது.

கிஷோர் பாய்டாபு ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். விரைவில் டிரைலர் வெளியாகிறது. தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. கடந்த 1917ல் வெளியான ‘பேர்ட்மேன்’ என்ற ஹாலிவுட் பட பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சில படங்கள் சிங்கிள் ஷாட்டில் உருவாக்கப்பட்டாலும், அதன் கதை பல கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும். ஆனால், ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’ படத்தின் கதை, ஒரு கேரக்டரை மட்டுமே மையப்படுத்தி நடக்கிறது. படம் ஓடும் நேரமும், கதை நடந்து முடியும் நேரமும் ஒன்றாகவே இருக்கும். கிரீன்மேட் ஷாட்டுகள் பயன்படுத்தப்படவில்லை.

Related Stories: