×

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி

சென்னை: சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். கொசு உற்பத்தியை தடுக்க, சென்னையில் உள்ள 22 நீர் நிலைகளையும் தூய்மைப்படுத்தும் பணியையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், வீடுகளில் தேங்கி கிடக்கின்ற தண்ணீரை அகற்றுவது குறித்த விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு ரூ.15 கோடி செலவு செய்து சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. வேற எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. ரூ.1,400 கோடிக்கும் மேலான திட்டமதிப்பீடு கணக்கிடப்பட்டு, பணிகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. எனவே, கட்டிட பணிகள் தொடங்கிய பிறகு மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்கிற கோரிகையை தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவிக்க இருக்கிறோம். மீண்டும் அரசியல் நிகழ்வுகள் நடத்தி அதன் மூலம் 3-வது அலைக்கு வழிவகுத்திட கூடாது. அதற்கு எந்த அரசியல் கட்சிகளும் காரணமாகவும் இருந்திட கூடாது என்றார்.* ஒன்றிய அரசிடம் 13 கோரிக்கைகளை அளிக்கிறோம்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்திற்கு தேவையான சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்த உள்ளோம். குறிப்பாக, தடுப்பூசிகள் கூடுதலாக தரவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவோம். மக்கள் தொகைக்கு ஏற்ப, கூடுதலாக தடுப்பூசி வழங்க கோரிக்கை வைக்க இருக்கிறோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை உடனடியாக தொடங்கவும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்த இருக்கிறோம். புதிய 11 மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு உடனடியாக ஆய்வுமேற்கொண்டு அனுமதி வழங்கக்கோரி உள்ளோம். தடுப்பூசியின் தேவை அதிகமாக இருப்பதால், செங்கல்பட்டு மற்றும் குன்னுாரில் உள்ள தடுப்பூசி மையங்களை, உடனடியாக திறக்கும் அவசியத்தை எடுத்துரைக்க உள்ளோம். இதுபோல் 13 கோரிக்கைகள் மனுவாக எடுத்துச்செல்கிறோம்….

The post தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nadu ,Minister M. Subramaniam ,Chennai ,Chennai DMS ,dengue ,Minister ,M. Subramaniam ,
× RELATED குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக...