×

மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் இசிஆர் சாலையில் உயர் மின்னழுத்த பாதை புதை வழித்தடமாக மாற்றம்

* நீலாங்கரை முதல் அக்கரை வரை அமைக்கப்படுகிறது * மின்வாரிய அதிகாரி தகவல்சென்னை: சென்னை மாநகர் பகுதிகளில் தரைக்கு அடியில், கேபிள் வாயிலாகவும், சென்னை புறநகர் பகுதிகள் மற்றும்  கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை முதல் அக்கரை உள்ளிட்ட பல இடங்களில், மின் கம்பங்கள் வாயிலாக, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உதவியுடனும், மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது. இதில், பல்வேறு சிரமங்கள், உயிர் இழப்பு, மின்தடை போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது. மேலும், மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலக்கட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விடுவதாலும் மின் தடை ஏற்படுகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பணிகளில் உயர் மின் அழுத்த பாதையை புதைவழித்தடமாக மாற்ற மின்வாரியம் முடிவு செய்தது. எனவே, முன்னுரிமை அடிப்படையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உயர் மின்னழுத்த பாதையை  புதை வழித்தடமாக மாற்றி அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இப்பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அடையார், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை வரைக்கும் மின் கம்பங்கள் வழியாக தான் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அதனால், சில நேரங்களில் பறவைகள் அந்த வயரை தொடும் போது மின் தடை ஏற்படுகிறது. இந்த பகுதியில் மின் தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் புதை வழித்தடத்தில் மின் கேபிள் அமைக்கப்படுகிறது. இதனால், புயலால் கம்பி அறுந்து உயிர் சேதம் ஏற்படுவது 90 சதவீதம் தடுக்கப்படும். அதே போன்று மின் தடை ஏற்படுவதை தவிர்க்கலாம்.2016 முதல் புயல் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் தான். அடுத்து மழைக்காலம் என்பதால் இந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் இங்கு முதற்கட்டமாக புதைவழித்தட கேபிள் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பகுதிகளில் டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக ஆர்எம்யு எனப்படும் தொடர் மின்சுற்றி என்கிற பில்லர் பாக்ஸாக மாற்றப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் மின் விநியோக நஷ்டம் இருக்காது. இந்த பணி ஒரு வருடமாக மேற்கொள்ள திட்டமிட்டோம். இப்போது தான் வேலை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். * 112 கி.மீ நீளத்தில் புதைவழித்தடம்எதிர்வரும் மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மின் தடையை தவிர்க்க அடையாறு, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் உள்ள 112 கி.மீ உயர் மின்னழுத்த கம்பிகளை மின் புதைவழித்தடமாக மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக 600 மின்மாற்றியுடன் கூடிய மின் கட்டமைப்புகளை ஆர்எம்யு எனப்படும் தொடர் மின்சுற்றியாக மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. மின் கம்பங்களை அகற்றி மின் பகிர்மான பெட்டிகளாக மாற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

The post மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் இசிஆர் சாலையில் உயர் மின்னழுத்த பாதை புதை வழித்தடமாக மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Neelangarai ,Akkarai ,Chennai ,Chennai Metropolitan ,Dinakaran ,
× RELATED நீலாங்கரையில் பாலியல் தொழில்; பெண்...