×

உலகமே வியக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் ஆட்சி: நடிகர் வடிவேலு புகழாரம்

சென்னை: உலகமே வியக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார். கொரோனாவை ஒரே மாதத்தில் கட்டுப்படுத்தியிருக்கிறார் என நடிகர் வடிவேலு கூறினார். கொரோனா நிவாரண நிதியாக ₹5 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தலைமை செயலகத்தில் நடிகர் வடிவேலு நேற்று வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில், உலகமே வியந்து உற்றுப்பார்க்கிற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கடுமையாக பணிகளை மேற்கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டார். கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் மக்களிடம் மென்மையாக எடுத்துக் கூறி, யார் மனதும் புண்படாதபடி தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதிலும் முதல்வர் சாதித்து காட்டியுள்ளார். தடுப்பூசி போடுவதில் இப்போதும் சிலரிடம் முரண்பாடான கருத்து இருக்கிறது. ‘நாங்க தேக்குண்ணே… எங்க பாடிக்கு எதுவும் ஆகாது. ஊசி எல்லாம் வேணாம்’னு சிலர் சொல்கிறார்கள். தேக்கை கூட அரித்துவிடலாம். அதனால் ஊசி போட்டுக்கொள்ளுங்கள். ஒரு படத்தில் அல்வா வாசு என்னிடம் வந்து, ‘அண்ணே நான் கிளினிக் ஆரம்பிச்சிருக்கேன். வந்து ஊசி போட்டுக்குங்க’ என்பார். ‘நான் நல்லாத்தானே இருக்கேன், நான் எதுக்கு ஊசி போடணும்’ என்பேன். உடனே ஒரு கட்டையால் என் மண்டையை உடைத்துவிட்டு, ‘இப்போ வாங்கண்ணே’ என கூப்பிடுவார். அதுபோல்தான் கொரோனா தடுப்பூசி போடச்சொன்னால், சிலர் ‘நாங்க நல்லத்தானே இருக்கிறோம்’ என்கிறார்கள். அதையெல்லாம் யோசிக்காமல், அனைவரும் ஊசி போட முனைப்பு காட்ட வேண்டும். பழையபடி சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா என கேட்கிறார்கள். நல்லதே நடக்கும் என்பதுதான் என் பதில். சினிமாவிலிருந்து வளர்ந்து இப்போது ஓடிடி வந்துள்ளது. அதில் நடிக்கவும் பேச்சு நடக்கிறது. ராம்நாடுன்னு ஒன்று உள்ளது. ஒரத்தநாடு என்றும் உள்ளது. இதுபோல் நிறைய இருக்கிறது. நல்லா இருக்கிற தமிழ்நாட்டை எதுக்கு பிரிக்கணும். எதுக்கு அந்த பாவம்? தமிழ்நாடு நல்லா நிர்வாகத்தில் இருக்கும்போது, எதற்கு இதெல்லாம்? இதையெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது. இவ்வாறு வடிவேலு கூறினார்….

The post உலகமே வியக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் ஆட்சி: நடிகர் வடிவேலு புகழாரம் appeared first on Dinakaran.

Tags : G.K. Stalin ,Vativelu ,Chennai ,Chief Minister of ,India ,Corona ,B.C. ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...