கீர்த்தி கொடுத்த இன்ப அதிர்ச்சி

நானி நடித்துள்ள பான் இந்தியா படம், ‘தசரா’. ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கி வந்த இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. இதையொட்டி, படத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 130 பேருக்கு தலா 2 கிராம் தங்கக்காசுகளை கீர்த்தி சுரேஷ் தனது அன்புப்பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி தங்கையாக ‘போலா சங்கர்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

Related Stories: