×

தா.பழூர் அருகே எள் பிரித்தெடுக்கும் பணி தீவிரம்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் 500 ஹெக்டர் பரப்பளவில் எள் விவசாயம் செய்யப்பட்டது. இந்த எள் விவசாயம் தா.பழூர் சுற்றியுள்ள காரைக்குறிச்சி, கோட்டியால், நடுவலூர், சுத்தமல்லி, பருக்கள், காசாங்கோட்டை, புரந்தான், கோடங்குடி, சிலால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது எள் விவசாயம் செய்த விவசாயிகள் எள் அறுவடை செய்து பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏர் ஓட்டி எள் விதைத்து சுமார் 70 நாட்கள் விவசாயம் செய்து அதனை அறுவடை செய்து அதை வெப்பம் ஏற்றி உலுக்கி எள் எடுப்பதற்கு போர் போன்று அமைத்து, பின்னர் 6 நாட்கள் கழித்து அதை களைந்து முட்டு முட்டாக வெயிலில் காய வைத்து மாலை வேளையில் அதை உலுக்கி விடுவது வழக்கம். அதில் இருந்து கொட்டும் எள்ளை கூட்டி எடுத்து புடைத்து தூசி, கல் இல்லாமல் பிரித்து எடுப்பதாகவும், இதையே நான்கு நாள் தினமும் உலுக்கி எள் பிரித்து எடுத்து வருகின்றனர்.மேலும் இது குறித்து நடுவலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஒவ்வொறு ஆண்டும் மே மாதத்தில் எள் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு சுமார் 2 ஏக்கர் எள் சாகுபடி செய்து அவ்வப்போது பொழியும் மழையால் சரியான முறையில் விளைச்சல் இல்லாமல் போனது. பூ பூக்கும் தருணத்தில் மற்றும் பூ பூத்த தருணத்தில் மழை பொழிவு இருந்ததால் பூக்கள் உதிர்ந்ததால் அதிக அளவில் காய்கள் இல்லாமல் போனதே மகசூல் இழப்பிற்கு காரணம். சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு எள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்ற ஆண்டு 80 கிலோ மூட்டை 8,000த்திலிருந்து 12,000 வரை விற்பனை ஆனது.ஆனால் இந்த ஆண்டு 6,000த்திலிருந்து 8,000 வரை விலை போனாலும் விவசாயிகளிடம் இருந்து மூட்டை 6,500 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு எள் சாகுபடி ஏமாற்றத்தை தந்தாக கூறுகிறார்….

The post தா.பழூர் அருகே எள் பிரித்தெடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Porur ,Purur ,Ariyalur District, Tha ,Purur Agricultural District ,Dinakaraan ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!