×

ரூ.14,000 கோடி மோசடியாளர் மெகுல் சோக்ஸி டோமினிகா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆண்டிகுவா திரும்பினார்

ஆண்டிகுவா: இந்தியாவில் வங்கி கடன் மோசடிக்காக தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்ஸி டோமினிகா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆண்டிகுவா பார்புடா திரும்பியுள்ளார். இந்தியாவில் இருந்து தப்பிய பின்னர் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். அதன் அருகில் உள்ள டோமினிகா தீவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு நரம்பியல் மருத்துவம் பார்ப்பதற்காக டோமினிகா நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை தொடர்ந்து இந்திய மதிப்பில் சுமார் 2.50 லட்சம் ரூபாய் பிணை தொகை செலுத்திய பின்னர் அவர் தற்போது மீண்டும் ஆண்டிகுவா திரும்பியுள்ளார். இது அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் இந்தியாவில் வங்கிகளில் சுமார் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக தேடப்பட்டு வருகிறார்….

The post ரூ.14,000 கோடி மோசடியாளர் மெகுல் சோக்ஸி டோமினிகா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆண்டிகுவா திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Megul Soksi Domenica ,Antigua ,Meghul Soksi ,Dominica ,India ,Megul Soksi ,Dinakaran ,
× RELATED ஐசிசி யு-19 உலக கோப்பை அரையிறுதியில் இன்று இந்தியா-ஆஸி. பலப்பரீட்சை