×

கோடியக்கரை சரணாலயத்தில் விலங்குகளுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை: வனச்சரக அலுவலர் அயூப்கான் தகவல்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளிமான்கள் உள்ளன. மேலும் குரங்கு, பன்றி, குதிரை, நரி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடாக அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் எதிர்புறம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் 57 வகையான மரங்களும், 147 வகையான மூலிகைச் செடிகளும் உள்ளன. வனவிலங்கு சரணாலயத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும் மான்கள் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் அருந்துவதற்கு 57 குளங்கள் உள்ளன. மேலும் 10 நடமாடும் நீர்த் தொட்டிகள், 17 சிமெண்ட் தொட்டிகளும் உள்ளன. இதைத்தவிர கோடியக்காடு புகையிலை திடலில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைத்து வனச்சரகத்தில் உள்ள பேரளம் முதல் சவுக்கு பிளாட் வரை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சரணாலயத்தின் மான்கள் அதிகம் வசிக்கும் யானை விழுந்தான் பள்ளம் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு மழை நீர் தேக்க குளம் அமைக்கப்பட்டு மான்கள் மற்றும் சிறு விலங்குகள் தண்ணீர் அருந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வனவிலங்கு சரணாலயத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது.மேலும் சாலை ஓரத்தில் உள்ள குரங்குகளுக்கும் யாரும் உணவளிக்க கூடாது என தீவிரமாக பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோடியக்கரை வன சரகர் அயூப்கான் கூறியதாவது: தஞ்சை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் கலாநிதி ஆகியோரின் உத்தரவின் பேரில் வனச் சரகத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த சரணலாயத்தில் சுதந்திரமாக வன விலங்குகள் சுற்றி வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அனுமதி என்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. மான்கள் அதிகம் வசிக்கும் யானை பள்ளம் பகுதியில் வெட்டபட்ட குளத்தில் விட்டு விட்டு பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி உள்ளது. மான்களுக்கும், மற்ற வன விலங்குகளுக்கும் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை எனவும் கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்….

The post கோடியக்கரை சரணாலயத்தில் விலங்குகளுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை: வனச்சரக அலுவலர் அயூப்கான் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kodiyakarai ,Ayupkan ,Vedaranya ,Vedaranya taluka ,Kodiyakar Wildlife Sanctuary ,Kodiyakar ,Ayupcon ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...