×

கடையநல்லூர் கருப்பாநதி அணை அருகே ஆண் யானை எலும்புக்கூடாக மீட்பு

கடையநல்லூர்: கடையநல்லூர் கருப்பாநதி அணை அருகே இறந்த நிலையில் எலும்புக்கூடாக ஆண் யானை உடல் மீட்கப்பட்டது. கடையநல்லூர் வனச்சரகம் கருப்பாநதி அணை வைரவன் குளம் பீட் பகுதியில் வனக்காப்பாளர்கள் ரோந்து பணி சென்றனர். அப்போது யானை இறந்து கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து கடையநல்லூர் வனச்சரகர் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர், வன உயிரின காப்பாளர் கவுதமுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் முத்துகிருஷ்ணன், கால்நடை உதவி மருத்துவர் மனோகரன், கால்நடை வன ஆய்வாளர் அர்னால்டு வினோத் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், இறந்தது ஆண் யானை. 6 வயது இருக்கலாம். யானையின் மீது எந்தவிதமான காயங்களும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இறந்திருக்கலாம் என தெரிகிறது. ஆய்வுக்காக உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது, என்றார். உடற்கூறு ஆய்வின்போது கடையநல்லூர் பிரிவு வனவர் லூமிக்ஸ், சிறப்பு பணி வனவர் செல்லத்துரை, மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன், நெல்லை வன பாதுகாப்பு படை வனவர் இளவரசி, வனக்காப்பாளர்கள் பால்ராஜ், ஹமிதாள், குமார், விஏஓ முருகையா, சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்….

The post கடையநல்லூர் கருப்பாநதி அணை அருகே ஆண் யானை எலும்புக்கூடாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kadayanallur Karupanadi dam ,Kadayanallur ,Karupanadi Dam ,Kadayanallur Forest Karupanadi… ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவில் தாக்குதலில்...