கமலுடன் மீண்டும் இணையும் ஷாருக்கான்

சென்னை : ஹேராம் படத்தில் கமல்ஹாசனுடன் கவுரவ வேடத்தில் ஷாருக்கான் நடித்தார். அதன் பிறகு ஷாருக்கான் நடித்த மை ஹு நா இந்தி படத்தில் கமல்ஹாசனை நடிக்க கேட்கப்பட்டது. ஆனால், இதில் நடிக்க கமல்ஹாசன் மறுத்துவிட்டார். இதனால் ஷாருக்கான் ஒரு பேட்டியில் ஆதங்கம் அடைந்து பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் இருவரையும் இணைத்து வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது. இது பான் இந்தியா படம் என்பதால், ஷாருக்கான், மம்மூட்டி, சிவராஜ்குமார் ஆகியோரை நடிக்க வைக்க திட்டம் உள்ளதாம்.

இதுதொடர்பாக ஷாருக்கானுடன் மணிரத்னம் பேசி வருகிறாராம். ஷாருக்கான் தரப்பு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப் படுகிறது.

Related Stories: