×

பிரியாமணியின் கொட்டேஷன் கேங்

ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, சாரா அர்ஜூன் நடித்துள்ள படம், ‘கொட்டேஷன் கேங்’. இதன் இயக்குனர் விவேக் கே.கண்ணன் கூறுகையில், ‘முதலில் இக்கதையை ஓடிடிக்காக உருவாக்கினோம். படப்பிடிப்பு நடந்தபோது, இது தியேட்டருக்கான படம் என்பதை உணர்ந்தோம். இது கேங் வார் பற்றிய படம் இல்லை. உணர்ச்சி ததும்பும் கதையாக, பணத்துக்காக கொலை செய்யும் கொலைகாரர்கள் பற்றியதாக இருக்கும்.

ஆக்‌ஷனை விட, வாழ்க்கையின் உணர்ச்சிகரமான தருணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். சென்னை, மும்பை, காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடக்கும் ஹைப்பர்-லிங்க் எமோஷனல் டிராமாவாக உருவாக்கியுள்ளோம். ஜாக்கி ஷெராஃப், பிரியாமணி நடித்த பிறகு இது பான் இந்தியா படமாக மாறியது. சன்னி லியோன் தீவிரமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் குறிப்பிடும்படி இருக்கும். இன்னொரு ஹைலைட், டிரம்ஸ் சிவமணியின் இசை’ என்றார்.

அடுத்து டிரம்ஸ் சிவமணி கூறுகையில், ‘நானும், விவேக் கண்ணனும் வடசென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், கதையில் அவரது பார்வையை சரியாகப் புரிந்துகொண்டு பணியாற்ற முடிந்தது. எங்கள் ஏரியாவில் இதுபோன்ற கேங் மற்றும் சண்டைகளை பலமுறை பார்த்து பயந்திருக்கிறேன். இதனால், லோக்கல் இசை மற்றும் சாராம்சத்தை கதைக்குள் நூறு சதவிகிதம் செலுத்தியுள்ளோம் ’ என்றார்.

முக்கிய வேடங்களில் அஷ்ரப் மல்லிசேரி, ஜெயப்பிரகாஷ், அக்‌ஷயா, பிரதீப் குமார், விஷ்னோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் நடித்துள்ளனர். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Tags : Priyamani ,
× RELATED வார்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்