×

உத்தம வில்லன் நஷ்டத்தை ஈடுகட்டும் கமல்: லிங்குசாமி தகவல்

சென்னை: ஸ்பிளிட் ஸ்கிரீனிங் எனப்படும் ஒரே திரையில் ஓடும் இரண்டு படமாக உருவாகி உள்ளது ‘பிகினிங்’. இதனை ஜெகன் விஜயா இயக்கி உள்ளார், வினோத் கிஷன், கவுரி, ரோகினி நடித்திருக்கிறார்கள். இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் வெளியிடுகிறார். படத்தின் அறிமுக விழாவில் அவர் பேசியதாவது:

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை வெளியிடுகிறேன். இது விருது படமோ, ஓடிடி படமோ கிடையாது, திரையரங்கிற்கான படம். பிகினிங் படத்தைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் பல நல்ல படங்களை வெளியிடும். என் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு 3 மாதத்தில் ஆரம்பமாகும். உத்தம வில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடு தான் எடுத்தார்கள்.

ஆனால், அப்படத்தால் நான் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதலில் நாங்கள் முடிவெடுத்தது பாபநாசம் படத்தை தயாரிக்கத்தான். ஆனால், கமல் சார் ஆசைப்பட்டதால் உத்தம வில்லன் படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தம வில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் சார் ஒரு படம் செய்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Kamal ,Lingusamy ,
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்