×

இலங்கைக்கு படகில் கடத்த முயற்சி நடுக்கடலில் விரட்டிச் சென்று 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்: சினிமாவை மிஞ்சும் வகையில் வனத்துறை நடவடிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் வேதாளை, குறவன்தோப்பு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் கடலில் நின்ற  நாட்டுப்படகு, வேகமாக புறப்பட்டது. சந்தேகமடைந்த வனத்துறையினர் ரோந்து படகில் பின் தொடர்ந்து சினிமாவில் வருவதுபோல துரத்திச் சென்றனர். மனோலி, முயல் தீவு இடையே நாட்டுப்படகை மடக்கி பிடித்தனர். படகில் சோதனை செய்தபோது 300 கிலோ கடல் அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து படகுடன் கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், வேதாளையை சேர்ந்த மீரான், முகமது நஷீர் உட்பட 7 பேரை கைது செய்தனர்.விசாரணையில், கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்தி சென்றதாகவும், வனத்துறையினர் துரத்தி வந்ததால் உயிருடன் இருந்த 500 கிலோ கடல் அட்டைகளை கடலில் தூக்கி எறிந்ததாகவும்  தெரிவித்தனர். …

The post இலங்கைக்கு படகில் கடத்த முயற்சி நடுக்கடலில் விரட்டிச் சென்று 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்: சினிமாவை மிஞ்சும் வகையில் வனத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ramanathapuram ,Venkatesh ,Ramanathapuram District ,Manal Forest Officer ,Vedal ,Kavanthopam ,
× RELATED ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு...