×

விண்வெளி சுற்றுலா ஜெப் பெசோஸ் நிறுவனத்துக்கு அனுமதி

வாஷிங்டன்: உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் சிஇஓவுமான ஜெப் பெசோஸ் ப்ளூ ஆர்ஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மனிதர்களை விண்ணுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்காக நியூஷெப்பர்ட் என்ற விண்கலத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் மனிதர்களை விண்ணுக்கு ஏற்றிச்செல்வதற்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு உரிமம் வழங்கியுள்ளது. இங்கிலாந்து கோடீஸ்வர் ரிச்சர்ட் பிரான்சன் தனது விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் உருவாக்கிய யூனிட்டி என்ற விண்கலம் மூலம் தனது குழுவினருடன் வெற்றிகரமாக விண்வெளி பயணத்தை முடித்து திரும்பியுள்ளார். இந்நிலையில் ஜெப் பெசோசின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் விண்வெளி பயணத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி ஜெப் பெசோஸ் தனது நிறுவன விண்கலத்தின் பரிசோதனையில் விண்வெளிக்கு பறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது….

The post விண்வெளி சுற்றுலா ஜெப் பெசோஸ் நிறுவனத்துக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Jeff Bezos ,Washington ,Jeb Bezos ,Amazon ,Blue Orgin ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...