×

கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை போலீஸ் கமிஷனர் அறிக்கை அளிக்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாக்கியராஜ், தனது ஆட்டோவில், நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து வந்த திருமுல்லைவாயல் ஏட்டு சந்தோஷ், அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்துகாவல் நிலையத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு மறுத்த பாக்கியராஜ், அங்கு கிடந்த உடைந்த பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த பாக்கியராஜ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்தார். நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது.ஏட்டு சஸ்பெண்ட்இந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி ஆகியோர் தீவிரமாக விசாரித்தனர். இதுதொடர்பான விரிவான அறிக்கையை சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் ராஜேஸ்வரிக்கு அனுப்பினர். இதையடுத்து, நேற்று காலை ராஜேஸ்வரி, தலைமை காவலர் சந்தோஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்….

The post கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை போலீஸ் கமிஷனர் அறிக்கை அளிக்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,Chennai ,Pakyaraj ,Ayyappakkam ,Thirumullaivayal ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?