×

தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் விநியோகம் நிறுத்தம்: சுகாதாரத் துறை தகவல்

சென்னை: கொரோனோ 2து அலை உச்சநிலையில் இருந்த போது கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருத்து தேவை அதிகமாக இருந்தது. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக மருந்து வழங்கப்படும் என அரசு அறிவித்தது. தேவைக்கு ஏற்றவாறு இணையதளத்தில் தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பித்து மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் வழியே இந்த மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மருத்துவமனைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால், தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து ரெம்டெசிவிர் மருந்துக்கான கோரிக்கை குறைந்தது. எனவே, தனியார் மருத்துவமனைகளுக்கு இணையதளம் மூலம் டெம்டெசிவிர் மருந்து வழங்குவது வரும் 17ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்….

The post தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் விநியோகம் நிறுத்தம்: சுகாதாரத் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,2nd wave of Corona ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!