கவுதம் கார்த்திக் -மஞ்சிமா காதல் திருமணம்: சென்னையில் நடைபெற்றது

சென்னை: நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மணிரத்னத்தின் கடல் படம் மூலம் நடிகரானார் கவுதம் கார்த்திக். இவர் நடிகர் கார்த்திக்கின் மகன். முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். இதையடுத்து மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். அண்மையில் தான் சமூக வலைதளத்தில் தங்கள் காதல் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் நேற்று கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் கூட்டாக அறிவித்தார்கள். ஆனால் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க திரையுலகினற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: