பேச்சிலர் பார்ட்டி கொடுத்த ஹன்சிகா

மும்பை: தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்து அசத்தினார் நடிகை ஹன்சிகா. வேலாயுதம், சிங்கம் 3, ரோமியோ ஜூலியட், ஒரு கல் ஒரு கண்ணாடி, வாலு, அரண்மனை உள்பட பல படங்களில் நடித்தவர் ஹன்சிகா. இவர் தனது தோழியின் முன்னாள் கணவரும் தனது பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கத்துரியாவை காதலித்தார். இரு குடும்பத்தாரும் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து டிசம்பர் 4ம் தேதி இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுக்க விரும்பினார் ஹன்சிகா. அதன்படி மும்பையில் நேற்று முன்தினம் இரவு, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஹன்சிகா பார்ட்டி கொடுத்தார். இதில் அவரது நெருங்கிய தோழிகள் மட்டும் கலந்துகொண்டனர். இது பற்றி தனது சமூக வலைத்தளத்தில் ஹன்சிகா கூறும்போது, ‘இந்த நாள் சிறந்த நாளாக மாற எனது இதயத்துக்கு நெருக்கமான தோழிகள்தான் காரணம். அவர்களுக்கு எனது அன்பை வௌிப்படுத்தும் தருணமாக இது அமைந்துவிட்டது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்’ என்றார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க ஹன்சிகா முடிவு செய்திருக்கிறார்.

Related Stories: