அஜித்துடன் அர்ஜுன் திடீர் சந்திப்பு

சென்னை: அஜித்துடன் நடிகர் அர்ஜுன் சந்தித்த புகைப்படம் வெளியானதால் இவர்கள் சேர்ந்து நடிக்கப்போகிறார்கள் என தகவல் பரவியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன் நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் அஜித், அர்ஜுன் சந்தித்துக் கொண்டனர். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. மங்காத்தா படத்தின் இரண்டாவது பாகத்தில் இவர்கள் இணைந்து நடிக்க உள்ளதாக சிலர் தகவல் பரப்பினர். ஆனால் இதை அஜித் தரப்பு மறுத்துள்ளது.

அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது.

இதையொட்டி சென்னையிலுள்ள ஒரு ஓட்டலில் தனது பிறந்த நாளை அவர் கொண்டாடினார். அப்போது அந்த விழாவுக்கு அர்ஜுன் வந்திருந்தார். அஜித் மற்றும் ஷாலினிக்கு நெருங்கியவர்கள் மட்டுமே இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டனர். அர்ஜுனுடன் சங்கர் குரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஷாலினி நடித்திருந்தார். அப்போது முதல் அவரது நலம் விரும்பியாக அர்ஜுன் இருக்கிறார். இதனால் தனது பிறந்த நாள் விழாவுக்கு அவரை ஷாலினி அழைத்திருக்கிறார். அப்போதுதான் அவர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். இப்போதைக்கு எந்த படத்திலும் இவர்கள் இணைந்து நடிக்கவில்லை என அஜித்துக்கு நெருங்கியவர்கள் கூறினர்.

Related Stories: