×

ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் 1 நிமிடத்திற்கு 1050 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் திறப்பு

ஊட்டி : ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 1.5 கேஎல்டி., ஆக்சிஜன் டேங்க் மற்றும் 6 கேஎல்டி., ஆக்சிஜன் டேங்க் உள்ளன. இதுதவிர ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளும் உள்ளன. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.94.40 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு ஜெனரேட்டர் மற்றும் ஆக்சிஜன் டேங்க்குகள், இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த புதிய ஆக்ஸிஜன் பிளாண்ட் மூலம் காற்றில் உள்ள இதர வாயுக்களை பிரித்தெடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். 1 நிமிடத்திற்கு 1050 லிட்டர் 94.7 சதவீதம் தூய்மையான ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். மிதமான ஆக்சிஜன் தேவையுள்ள நோயாளிகளுக்கு தேவையின் அடிப்படையில் 160 முதல் 180 நோயாளிகளுக்கு வழங்க முடியும். ஆக்ிசஜன் தேவை அதிகமுள்ள நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் 80 முதல் 100 நோயாளிகளுக்கும் ஆக்ிசஜன் அளிக்க முடியும். ஆக்சிஜன் சிலிண்டர்களில் திரவ ஆக்சிஜன்களை நிரப்ப மற்ற மாவட்டங்களை எதிர்பார்த்து காத்திருக்க கூடிய தேவை குறையும். நமக்கு தேவையான ஆக்சிஜனை நாமே உற்பத்தி செய்ய முடியும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ஊட்டி சார் ஆட்சியர் மோனிகா ரானா, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி டீன் மனோகரி உட்பட பலர் உடனிருந்தனர்….

The post ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் 1 நிமிடத்திற்கு 1050 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty Government Hospital ,Ooty ,Ooty government hospital complex ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...