×

நாட்டின் பொருளாதாரம் எப்போது ‘டேக் ஆப்’ ஆகும் என தெரியவில்லை : உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் அரசின் பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் சாலை பணிகள், நடைபாதை பணிகள், அரசு அலுவலகங்கள் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதிக்கக் கோரிகை விடுத்து இருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அமைக்கும் சாலைகள் 6 மாதங்கள் நீடிப்பதில்லை என்றும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்றும் வாதிட்டார்.மனுதாரரின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி அமர்வு, சாலைகள், கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக விதிகள் உள்ளது, அவற்றை அமல்படுத்த வேண்டும். சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது. குடிமக்கள் விழிப்புணர்வுடன் அதிகாரிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் பொறுப்புடன் செயல்பட வைக்க வேண்டும்.நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை. அடிப்படை கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை. இன்னும் நாட்டின் பொருளாதாரம் எப்போது ‘டேக் ஆப்’ ஆகும் என தெரியவில்லை,’ என்று தெரிவித்தனர். இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் உத்தரவிட்டனர். …

The post நாட்டின் பொருளாதாரம் எப்போது ‘டேக் ஆப்’ ஆகும் என தெரியவில்லை : உயர்நீதிமன்றம் வேதனை appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Madras High Court ,Srikrishna ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...