×

கோவக்காய்க்கு கிடைக்கல நல்ல விலை…-சின்னாளபட்டி பகுதி விவசாயிகள் வேதனை

சின்னாளபட்டி : சின்னாளபட்டியை சுற்றியுள்ள தொப்பம்பட்டி, அமலிநகர், பெருமாள்கோவில்பட்டி, காமலாபுரம், மெட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் திராட்சை பயிரிட்டிருந்த பந்தல்களில் கோவக்காயை பயிரிட்டிருந்தனர். தற்போது அவை நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. எனினும் மார்க்கெட்டில் கோவக்காய்க்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி செல்வராஜ் கூறுகையில், ‘உணவு பதார்த்தங்களில் கோவக்காய், கத்தரிக்காய் போல் இருப்பதால் சாம்பார், பொறியல் செய்வதற்கு அதிகளவில் பயன்படுத்துகின்றனர். கம்பம் பகுதியிலிருந்து கோவக்காய் நாற்று (குச்சி) ஒன்றுக்கு ரூ.15 விலை கொடுத்து நடவு செய்திருந்தேன். கொடியில் நன்கு காய் பிடித்து வரும் நிலையில் விலை குறைந்து வருவதால் வேதனையாக உள்ளது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ கோவக்காய் ரூ.30 வரை விலை போனது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.12க்கு மட்டுமே விற்பனையாகிறது. 1 கிலோ கோவக்காய் ரூ.25க்கு மேல் விற்றால்தான் நல்ல லாபம் கிடைக்கும்’ என்றார்….

The post கோவக்காய்க்கு கிடைக்கல நல்ல விலை…-சின்னாளபட்டி பகுதி விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,Thoppampatti ,Amalinagar ,Perumalkovilpatti ,Kamalapuram ,Mettur ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...