ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படம்

சென்னை: பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனும் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். அவர் நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது. ‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ என வரிசையாக பல திரைப்படங்களைத் தயாரித்து வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

Related Stories: