×

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடிக்கும் ஜப்பான்

சென்னை: கார்த்தி நடிக்கும் 25வது படம், ‘ஜப்பான்’. அவரது ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஏற்கனவே ‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்து வருகிறார். நேற்று ‘ஜப்பான்’ படத்தின் தொடக்க விழா நடந்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றனர். கடந்த 2016ல் வெளியாகி, தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜூ முருகன், இதற்கு முன்பு ‘குக்கூ’ படத்தையும், பின்பு ‘ஜிப்ஸி’ படத்தையும் இயக்கி இருந்தார். தற்போது கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தை எழுதி இயக்குகிறார்.

தெலுங்கில் காமெடி வேடங்களிலும், ஹீரோவாகவும் நடித்த சுனில், அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து பான் இந்தியா ஸ்டாரானார். தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘வள்ளிமயில்’ படத்தில் நடிக்கும் சுனில், அடுத்து ‘ஜப்பான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கடந்த 25 வருடங்களாக ஒளிப்பதிவாளராகவும் மற்றும் தமிழில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘கடுகு’, ‘கோலிசோடா 2’, கன்னடத்தில் ‘பைராஹி’ ஆகிய படங்களின் மூலம் இயக்குனராகவும் பணியாற்றிய எஸ்.டி.விஜய் மில்டன், தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் அவர், ‘ஜப்பான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் தூத்துக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

Tags : Raju Murugan ,Japan ,Karthi ,Anu Emmanuel ,
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...