சினிமாவிலும், அரசியலிலும் ஜெயிப்பது எப்படி? விஜய் வசந்த்

சென்னை: பிரஜின், வித்யா பிரதீப் நடித்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம், ‘D 3’. பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மனோஜ். எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே.கே.எம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் எடவானா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் வசந்த் எம்.பி பேசியதாவது: இந்த விழாவுக்கு சாம், மோகன் ராஜ் என்னை அழைத்தபோது, ‘சென்னை 28’ பட அனுபவம் ஞாபகத்துக்கு வந்தது. அது முழுக்க, முழுக்க நண்பர்களை பற்றியது. நண்பர்களின் கூட்டணியால் வெற்றிபெற்றது. அதுபோல் இங்குள்ளவர்களை பார்க்கும்போது தோன்றுகிறது. நான் அரசியல் பணிக்கு சென்றுவிட்டதால், சினிமாவில் சற்று இடைவெளி வந்தது போல் உள்ளது. என் தந்தை விட்டு சென்ற அரசியல் பணியையும், தொழிலையும் செய்து வருகிறேன். எந்த விஷயத்திலும் நான் முழு முயற்சியுடன் இருப்பேன். எந்த வேலையையும் ரசித்து செய்தால் வெற்றி உண்டு. உண்மையாக உழைத்தால் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் ஜெயிக்கலாம்.

Related Stories: