×

துணிவு படத்தில் அனிருத் பாடல்

சென்னை: அஜித்தின் துணிவு படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அஜித், மஞ்சு வாரியர் நடிக்கும் படம் துணிவு. வினோத் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. சமீபத்தில் படத்துக்கான தனது டப்பிங் பணிகளை அஜித் முடித்தார். இந்நிலையில் இதில் இடம்பெறும் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ளார். காக்கா கத புகழ் வைசாக் எழுதியிருக்கும் சில்லா சில்லா எனத் தொடங்கும் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த பாடலைத்தான் அனிருத் பாடியிருக்கிறார். சென்னை பாஷை பாடலாக இது உருவாகியுள்ளது. படக்குழுவினர் கூறும்போது, ‘வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடல் இடம்பெற்றது. அந்த வரிசையில் இந்த பாடல் இருக்கும். அனிருத் இந்த பாடலை ரசித்து பாடியிருக்கிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். வங்கி கொள்ளையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. ஆக்‌ஷன் திரில்லராக இந்த படம் அமைந்துள்ளது’ என்றனர்.

Tags : anirut ,dunivu ,
× RELATED 13 வருடங்களுக்கு பிறகு அஜீத்துடன் இணைந்து நடிக்கும் பாவனா