சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 66வது படம், ‘வாரிசு’. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்துக்காக தமன் இசையில் விஜய் குரலில் பாடிய, ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே... உன்னை உதடு வலிக்க கொஞ்சணுமே’ என்று தொடங்கும் முழு பாடல் நாளை வெளியாகிறது. நேற்று இப்பாடலின் முன்னோட்டம் வெளியாகி வைரலானது. இதில் விஜய் நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படம் வரும் பொங்கல் பண்டிகை நாளில் திரைக்கு வருகிறது.