ஒரே நாளில் 4 ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ்

சென்னை: பொங்கல், சங்கராந்தி பண்டிகையொட்டி அஜித், விஜய், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன. அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகிறது. சங்கராந்தி பண்டிகை தினத்தையொட்டி சிரஞ்சீவி நடித்துள்ள வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி படங்கள் திரைக்கு வருகின்றன. ஒரே நாளில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த 4 ஸ்டார்களின் படங்கள் திரைக்கு வருவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தியேட்டர்கள் திருவிழாக் கோலத்துக்கு மாறும், பாக்ஸ் ஆபீசில் இந்த படங்கள் பெரும் வசூலை ஈட்டும் என தியே ட்டர் அதிபர்களும் வினியோகஸ்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.