பான் இந்தியா படத்தில் விஜய் சேதுபதி

சென்னை: விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன், கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘மைக்கேல்’. இதை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். 1980களில் கதை நடக்கிறது. இப்படத்தின் தமிழ் டீசரை தனுஷ், தெலுங்கு டீசரை நானி, மலையாள டீசரை துல்கர் சல்மான், கன்னட டீசரை ரக்‌ஷித் ஷெட்டி, இந்தி டீசரை ராஜ்குமார் ராவ், ரகுல் பிரீத் சிங், ஜான்வி கபூர், இயக்குனர்கள் ராஜ் அன்ட் டிகே இணைந்து வெளியிட்டனர். இதில் விஜய் சேதுபதியின் ரோல், கவுதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் இடம்பெற்றுள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக வரலட்சுமி, சந்தீப் கிஷன் ஜோடியாக திவ்யான்ஷா கவுசிக் ஆகியோருடன் அனுசுயா பரத்வாஜ், வருண் சந்தேஷ் நடித்துள்ளனர். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். திரிபுராநேனி கல்யாண் சக்ரவர்த்தி, ராஜன் ராதாமணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி வசனம் எழுதியுள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.