உலக தரத்தில் கன்னட சினிமா ரவிச்சந்திரன் பெருமிதம்

பெங்களூரு: கன்னட சினிமா உலக தரத் துக்கு வளர்ந்திருப்பதாக, கன்னட நடிகர் ரவிச்சந்திரன் கூறினார். ‘கேஜிஎஃப்’, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ ஆகிய படங்களை தொடர்ந்து கன்னடத்தில் தயாராகி வரும் பான் இந்தியா படம், ‘பனாரஸ்’. இதை ‘பியூட்டிஃபுல் மனசுகுலு’, ‘பெல்பாட்டம்’ படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கியுள்ளார். ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். அத்வைதா  குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசையமைத் துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் பேசியதாவது: சமீபகாலமாக கன்னட சினிமா இந்திய அளவிலும், உலக நாடுகளிலும் வெற்றி பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. உலக தரத்தில் தயாராகும் படங்கள் வசூலையும் குவித்து வருகிறது. இது கன்னட சினிமாவுக்கே பெருமை தரும் விஷயமாகும். அந்த வரிசையில் ‘பனாரஸ்’ படமும் சாதனை படைக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற இன்னும் நிறைய பான் இந்தியா படங்கள் கன்னடத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான திறமையும், தகுதியும் கன்னடக் கலைஞர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசி னார். திலக்ராஜ் பல்லால் நன்றி கூறினார்.

Related Stories: