நாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது

சென்னை: நாளை 23ம் தேதி 7 தமிழ்ப் படங்கள் திரைக்கு வருகின்றன. வரும் 29ம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த ‘நானே வருவேன்’ படம் வெளியாகிறது. இதில் ஹீரோயின்களாக இந்துஜா, எல்லி அவ்ரம் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 30ம் தேதி மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வெளியாகிறது. இதில் விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ரஹ்மான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், நாளை 7 படங்கள் திரைக்கு வருகின்றன.

ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா, இனியா, ‘வத்திக்குச்சி’ திலீபன், ‘பாகுபலி’ பிரபாகர், உமா ரியாஸ்கான் நடித்துள்ள படம், ‘ஆதார்’. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கியுள்ள படம், ‘பபூன்’. இதில் வைபவ் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஃபெல்லினி இயக்கத்தில் அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராஃப் நடித்துள்ள படம், ‘ரெண்டகம்’. அருள்ராஜ் கென்னடி இசை அமைத்துள்ளார். ‘100’ என்ற படத்துக்குப் பிறகு சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் நடித்துள்ள படம், ‘ட்ரிகர்’. ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் வசனம் எழுதியுள்ளார். இப்படங்களை தவிர ‘டிராமா’, ‘கெத்துல’, ‘குழலி’ ஆகிய படங்களும் நாளை திரைக்கு வருகின்றன.

Related Stories: