×

கடையம் அருகே குலுக்கைமலை பகுதியில் நள்ளிரவில் தீ விபத்து

கடையம் : கடையம் அடுத்த தோரணமலை அருகே குலுக்கைமலையில் நேற்று முன் தினம்  நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. தகவலை அடுத்து அம்பை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாக  துணை இயக்குநர் (பொ) கவுதம் பிறப்பித்த உத்தரவின் பேரிலும் கடையம் வனச்சரகர் (பொ) பரத் அறிவுறுத்தலின் படியும் கடையம் வனவர் முருகசாமி வழிகாட்டுதலின் பேரில்   வனக்காப்பாளர் மணி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் புற்கள் எரிந்து சாம்பலாகின. இதே போல் கடந்த 5ம் தேதி ஜெபமலை பின்புறம் உள்ள பொத்தை, 7ம் தேதி ராமநதி அணை அருகேயுள்ள பொத்தையில் பற்றிய தீயை வனத்துறையினர் போராடி அணைத்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கடையம் அருகே பொத்தை பகுதிகளில் தொடர்ந்து நள்ளிரவில் தீ பிடித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தீக்காண காரணங்கள் இடி மின்னல் எனக்கூறப்பட்டபோதும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வுநடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post கடையம் அருகே குலுக்கைமலை பகுதியில் நள்ளிரவில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Shukkimalai ,Thoranamalai ,Shukkayhill ,Dinakaran ,
× RELATED தோரணமலை கோயிலில் கல்வியில் மேன்மை பெற...