கிரிக்கெட் வீரருடன் சாரா அலிகான் டேட்டிங்

மும்பை: கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லை நடிகை சாரா அலிகான் காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது. பாலிவுட் நடிகர் சைப் அலிகான், அவரது முன்னாள் மனைவி அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலிகான். சாரா, பாலிவுட் நடிகையாக இருக்கிறார். நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டவர் சாரா. கருத்து வேறுபாடால் இவர்கள் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில்லை சாரா காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் சமீபத்தில் அவர்கள் ஓட்டல் ஒன்றுக்கு ஒன்றாக சென்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. 

இதற்கு முன்பாக, சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை சுப்மன் கில் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் முறிந்துவிட்டதாம். இதையடுத்துதான் சாரா அலிகானை அவர் காதலிக்கிறார் என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர். இதேபோல் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் ராகுலை காதலிக்கிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: