×

நான் வந்தியதேவன்; கமல் அருள்மொழி வர்மன்; ஆதித்த கரிகாலன் விஜய்காந்த்.... நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

மணிரத்னம் இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

PS1 Audio launch விழாவில் கமலை விக்ரம் படத்தின் வெற்றிக்காகப் பாராட்டிவிட்டு பேசத் தொடங்கிய அவர், ``எனக்கு நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் நான் பக்க எண்கள் பாத்தே தொடங்குவேன். 200-300 வரை இருந்தால் ஓகே. 500-க்கு மேல போனால் வாசிக்க மாட்டேன். பொன்னியின் செல்வன் மொத்தமாக ஐந்து பாகம் 2000 பக்கம் என்று கூறினார்கள்.

 `அட போங்கடா' என முதலில் கூறிவிட்டேன்."ஒரு பத்திரிகைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்கிற வாசகர் கேள்விக்கு, ரஜினி சரியாக இருப்பார் என கூறினார்." அப்போ முடிவு பண்ணேன் பொன்னியின் செல்வன் படிக்கணும் என்று ...

நாவல் படிக்க படிக்க அவ்ளோ அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கல்கி அவ்வளவு அழகாக வடிவமைத்திருந்தார். படித்து முடித்த பிறகு அவரை நேரில் பார்த்து காலில் விழணும் போல் இருந்தது. நாவலை வாசிக்கும் போதே என்னை நான் வந்தியதேவன் ஆகவும், கமலை அருள்மொழி வர்மன் ஆகவும் ஆதித்த கரிகாலன் விஜய்காந்த் ஆகவும், பெரிய பழுவேட்டையர் ஆக சத்யராஜையும் கற்பனை செய்து படித்தேன்" என்றார். மேலும் தளபதி பட ஷூட்டிங்கிலிருந்து பல சுவாரசியமான தகவல்களை பகிரத் தொடங்கினார், ``தளபதி பட ஷூட்டிங்கில் ஷோபனா என்னுடன் விளையாடுவார்.

என்ன சார் உங்களுக்கு பதிலாக கமலை நடிக்க வைக்கப் போகிறார்களா என்று நகைச்சுவையாக கேட்பார்" என ஷூட்டிங் அனுபவங்களை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார். 70 ஆண்டுகள் கழித்து சுபாஸ்கரன் மனசு வைத்ததால் இந்த பொன்னியின் செல்வன் தற்போது நடந்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மணி ரத்னம் என்கிற அசுர திறமைசாலி மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கைதான்." என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags : Kamal Arulmozhi Varman ,Aditha Karikalan Vijaykanth ,Rajinikanth ,
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...