×

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உறுதி கூட்டுறவு நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்

புதுடெல்லி: சமீபத்தில் ஒன்றிய அமைச்சரவை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டுறவு துறை என்ற புதிய இலாக்காவை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. இத்துறையானது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநில உரிமையின் கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், கூட்டுறவு சங்க அமைச்சராக பதவியேற்று 3 நாட்களுக்குப் பிறகு அமித்ஷா நேற்று முதல் முறையாக ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இதில் அமித்ஷா உடன் தேசிய கூட்டுறவு சங்க தலைவர் திலீப் சங்கானி, இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட் (இப்கோ) தலைவர் பி.எஸ்.நகாய், நிர்வாக இயக்குனர் அவாஸ்தி, தேசிய வேளாண் கூட்டுறவு மார்க்கெட்டிங் பெடரேஷன் தலைவர் பிஜிந்தர் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இதில், ‘பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுடன் அதிக ஒத்துழைப்புடன் கூடுதல் அதிகாரம் வழங்க உறுதி கொண்டுள்ளது,’ என அமித்ஷா தெரிவித்துள்ளார்….

The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உறுதி கூட்டுறவு நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amitsha ,New Delhi ,Union Cabinet ,Government of the Union ,Ilaka ,Cooperative Department ,Dinakaran ,
× RELATED காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 4 மாநில...