×

முடி திருத்துவோர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: அமைச்சர் உறுதி

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், தமிழ்நாடு முடித்திருத்துவோர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.  அப்போது சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. பொதுமக்களுக்குக் கொரோனா காலத்தில் முதல் கட்டமாக ரூ.2,000மும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாளான ஜுன் 3ம் தேதி ரூ.2,000மும், மளிகைப் பொருட்களும் வழங்கியமைக்கு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.  மேலும், அமைச்சரிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.  அதற்கு அமைச்சர் கணேசன், முடித்திருத்துவோர் சங்கங்களின் நிர்வாகிகளின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.   மேலும், நிர்வாகிகள் தங்களது சங்கத்தின் 41வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு முதலமைச்சரின்ஒப்புதல் பெற்று கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்….

The post முடி திருத்துவோர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Chief Secretariat ,Labor Welfare ,Minister ,Ganesan ,Tamil Nadu Barbers Associations ,
× RELATED திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர்...