×

ஆண்கள் ஒற்றையர் பைனலில் பெரட்டினி – ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச்சுடன் இளம் வீரர் மேட்டியோ பெரட்டினி இன்று மோதுகிறார்.உலகின் நம்பர் 1 வீரரும், விம்பிள்டன் தொடரில் ஏற்கனவே 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (34 வயது, செர்பியா) 6வது முறையாக இங்கு கோப்பையை முத்தமிடுவதுடன் நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர் (சுவிஸ்), ரபேல் நடால் (ஸ்பெயின்) சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் பைனலில் களமிறங்குகிறார். பெடரர் மற்றும் நடால் இருவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், இத்தாலியின் பெரட்டினிக்கு (25 வயது) எதிராக இன்று வெற்றி பெற்றால் ஜோகோவிச்சும் அவர்களுடன் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.அரை இறுதியில் கனடா வீரர் டெனிஸ் ஷபாவலோவுடன் (22 வயது) மோதிய ஜோகோவிச் 7-6 (7-3), 7-5, 7-5 என்ற நேர் செட்களில் கடுமையாகப் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். 2018, 2019ல் சாம்பியன் பட்டம் வென்றதில் இருந்து நடப்பு தொடரின் அரையிறுதியும் சேர்த்து விம்பிள்டனில் ஜோகோவிச் தொடர்ச்சியாக 20 வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதே சமயம், கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறியுள்ள பெரட்டினி, புதிய சாம்பியனாக சாதனை படைக்கும் முனைப்புடன் வரிந்துகட்டுகிறார். அரையிறுதியில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் மோதிய பெரட்டினி 6-3, 6-0, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். அந்த போட்டியில் அவர் 22 மின்னல் வேக ஏஸ் சர்வீஸ்களை போட்டு அசத்தினார். இந்த நிலையில்ல், ஜோகோவிச் – பெரட்டினி மோதும் இறுதிப் போட்டி டென்னிஸ் ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. …

The post ஆண்கள் ஒற்றையர் பைனலில் பெரட்டினி – ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Beratini ,Djokovich ,Balaperite ,London ,Wimbledon Grand Slam tennis series ,Novak Djokovic ,Peratini ,Jokovich ,Balaperitch ,Dinakaran ,
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்: 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்