×

இளையராஜாவுடன் உள்ள வீடியோ வெளியீடு ‘எங்கள் இலக்கு தமிழ்நாடுதான்’: சொல்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: இசை அமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வெவ்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இளையராஜா ஹங்கேரியிலும், ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவிலும் இருக்கின்றனர். அப்போது இருவரும் திடீரென்று ஏதோ ஒரு நாட்டின் விமான நிலையத்தில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இதையடுத்து இருவரும் பேட்டரி காரில் அருகருகே அமர்ந்து செல்லும் வீடியோ ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால், எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடுதான்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இசைத்துறையில் இருவரும் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும், அவர்கள் எப்போதுமே குரு, சிஷ்யன் போல் பழகி வருவது இருதரப்பு ரசிகர்களுக்கும் பெருமகிழ்ச்சி அளித்துள்ளது.

Tags : Tamil Nadu ,AR Rahman ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...