×

நெல்லிக்குப்பம் அருகே குளத்தில் வாலிபர் சடலம்: நண்பரிடம் போலீசார் விசாரணை

நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் அருகே விலங்கல்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அழகேசன் மகன் கார்த்திகேயன் (37), அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் வேல்முருகன் (27). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் பைக்கில் காராமணிக்குப்பம் வாரச்சந்தைக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள அய்யனார் சிலையருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் குணமங்கலம் பகுதிக்கு சென்று அங்குள்ள குளத்தின் அருகே பைக்கை நிறுத்தி விட்டு மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் வேல்முருகன் மட்டும் பைக்கில் தனியாக சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் நீண்ட நேரத்துக்கு மேல் துணி மற்றும் மிதியடி குளத்தின் அருகில் இருந்ததை அறிந்த அப்பகுதியினர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அப்போது குளத்தின் அருகில் நீண்டநேரமாக துணி இருப்பதால் சந்தேகம் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி கார்த்திகேயனின் உடலை தேடினர். 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் கார்த்திகேயனின் உடலை மீட்டனர். பின்னர் கார்த்திகேயனுடன் வந்தவர் யார் என விசாரணை செய்து வேல்முருகனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கார்த்திகேயன் மது போதையில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற போது இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  …

The post நெல்லிக்குப்பம் அருகே குளத்தில் வாலிபர் சடலம்: நண்பரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Alaghesan ,Karthikeyan ,Vilangalpattu Mariamman Koil Street ,
× RELATED நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு...