×

மம்மூட்டி மோகன்லால் மீண்டும் இணையும் படம்

திருவனந்தபுரம்: மம்மூட்டி, மோகன்லால் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் சூப்பர் ஸ்டார்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர். சமீபகாலமாக இவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. 1998ல் ஹரிகிருஷ்ணன்ஸ் என்ற படத்தை பாசில் இயக்கினார். இதில் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருந்தனர். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பாசில் விரும்புகிறார். அதற்கான கதையும் அவர் எழுதிவிட்டார். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் அதில் மோகன்லால், மம்மூட்டி இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறாராம்.
மோகன்லால், திரிஷ்யம் 3, ராம், பிருத்விராஜ் இயக்கும் எம்புரான் படங்களில் நடிக்க உள்ளார். அதேபோல் உன்னிகிருஷ்ணன் இயக்கும் படம், கமல் இயக்கும் படம் என மம்மூட்டியும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனால் அடுத்த ஆண்டில் இவர்களை இணைத்து வைத்து படம் இயக்கலாம் என பாசில் திட்டமிட்டுள்ளாராம்.

Tags : Mammootty ,Mohanlal ,
× RELATED ஓடிடியில் வெளியானது ஜெயராம், மம்மூட்டி நடிப்பில் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்‘