×

ஆந்திர கால்வாயில் செல்பி எடுக்க முயன்ற சென்னை வாலிபர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி: ஒருவர் மாயம்

சென்னை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வரதய்யபாளையம் மண்டலம், உப்பலமடுகு வனபகுதியில் நீர்வீழ்ச்சி உள்ளது. கொரோனா பேரிடர் காலம் என்பதால் நீர்வீழ்ச்சியில் நீராடுவதற்கு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனை அறியாத சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த லோகேஷ்(24), இவரது மனைவி பிரியா(20), நண்பர்கள் யுவராஜ், பாலாஜி, கார்த்திக் ஆகிய 5 பேர் கடந்த 6ம் தேதி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவ்வழியாக உள்ள தெலுங்கு – கங்கா கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததை பார்த்த யுவராஜ் கால்வாயில் இறங்கி செல்பி எடுக்க முயன்றார். அப்போது கால்தவறி யுவராஜ் கால்வாயில் விழுந்தார். யுவராஜை காப்பாற்றுவதற்காக அவரது நண்பர்களான பாலாஜி, கார்த்திக், லோகேஷ் ஆகியோர் கால்வாயில் குதித்து தேட முயன்றனர். அப்போது, தண்ணீரின் வேகத்தில் மூவரும் அடித்துக் செல்லப்பட்டனர். யுவராஜ் மட்டும் கால்வாயின் கரையோரம் இருந்த மரக்கிளையை பற்றிக்கொண்டு மேலே வந்தார். நீரில் அடித்து செல்லப்பட்டவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் லோகேஷின் மனைவி பிரியா நேற்று முன்தினம் வரதய்யபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தெலுங்கு கங்கா கால்வாயில் நீச்சல் வீரர்களை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று இரவு லோகேஷ் மற்றும் பாலாஜி இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கார்த்திக்கின் சடலத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post ஆந்திர கால்வாயில் செல்பி எடுக்க முயன்ற சென்னை வாலிபர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி: ஒருவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Andhra canal ,mayam ,CHENNAI ,Uppalamaduku forest area ,Chittoor district ,Andhra state ,Varadaiyapalayam mandal ,corona disaster ,
× RELATED தளி அருகே மூதாட்டி மாயம்