×

கத்தியுடன் வீடியோ வாலிபர் சிக்கினார்

அண்ணாநகர்: அமைந்தகரை, என்.எஸ்.கே. நகர், 17வது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(26), கேன் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடிகர் வடிவேல் பானியில் நானும் ரவுடி தான் என்பது போல ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய  சிறுவன் அந்த காட்சியை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளான். புகாரின்பேரில் ரஞ்சித்தை நேற்று மாலை அமைந்தகரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில்,  கடந்த ஆண்டு ரஞ்சித் தனது பிறந்த நாள் கொண்டாடியபோது எடுக்கப்பட்டதாக கூறி கதறினார். மேலும், ரஞ்சித் மீது ஏற்கனவே அமைந்தகரை, அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில்  அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது  தெரியவந்தது….

The post கத்தியுடன் வீடியோ வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Nitakarai, N.S.K. ,Ranjit ,17th Street, Nagar ,Dinakaran ,
× RELATED நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்