ஸ்பெயினில் சுதந்திர தினம் கொண்டாடிய நயன்தாரா

பார்சிலோனா: ஸ்பெயினில் சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கிறார் நயன்தாரா. திருமணத்துக்கு பிறகு கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் ஸ்பெயினுக்கு பறந்துள்ளார் நயன்தாரா. பார்சிலோனா நகரத்தில் இருக்கும் தம்பதி, நேற்றுமுன்தினம் ஊர் சுற்றியபடி வலம் வந்தனர். அப்போது கையுடன் கொண்டு வந்த தேசியக் கொடியை பிடித்தபடி, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது வௌிநாட்டு பயணிகள் பலர் நயன்தாராவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். ‘இந்தியாவிலிருந்து கிளம்பும்போதே தேசிய கொடியை வாங்கிக்கொண்டு சென்றோம். சுதந்திர தினத்தன்று, ஸ்பெயினில் இதை பறக்க விட நினைத்தோம். அதேபோல் செய்திருக்கிறோம்’ என விக்னேஷ் சிவன் கூறினார்.