×

மெல்போர்ன் திரைப்பட விழாவில் இயக்குனர் அபர்ணா சென்னுக்கு விருது

மும்பை: மெல்போர்னில் நடந்த திரைப்பட விழாவில் ‘தி ரேபிஸ்ட்’ படத்தின் பெண் இயக்குனர் அபர்ணா சென்னுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் 2022ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனருக்கான விருதை இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான அபர்ணா சென்னின் ‘தி ரேபிஸ்ட்’ படம் பெற்றுள்ளது. முன்னதாக, இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க கிம் ஜிசோக் விருதை வென்றது. மேலும் லண்டன் இந்திய திரைப்பட விழா, கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, கேரளாவின் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் கொண்டாடப்பட்டது. இந்த திரைப்படம், பாலியல் பலாத்காரத்தின் உடற்கூறியல், அதைச் செய்தவர்களின் ஆன்மா மற்றும் அதன் பின் அனுபவிக்கும் அதிர்ச்சி ஆகியவற்றின் பின்னணி கொண்ட கதை களமாக கொண்டது. குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் இந்தியாவில், பொதுவான சூழ்நிலையை சுயபரிசோதனை செய்வதின் அவசியம் குறித்து படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

Tags : Aparna Sen ,Melbourne Film Festival ,
× RELATED மெல்போர்ன் திரைப்பட விழாவில் திரையிடப்படும் “கிடா”  திரைப்படம்