தமிழ் படம் தயாரிக்கிறார் ஷாருக்கான்

மும்பை: இந்தி படங்களை தொடர்ந்து தனது பட நிறுவனம் மூலம் தமிழ், தெலுங்கு படத்தை தயாரிக்க ஷாருக்கான் முடிவு செய்துள்ளார். ரெட் சில்லீஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் ஷாருக்கான். இந்த நிறுவனத்தை அவரது மனைவி கவுரிகான் நிர்வகித்து வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து, அதில் ஷாருக்கான் நடித்திருக்கிறார். கடைசியாக அலியா பட் நடிப்பில் டார்லிங்ஸ் என்ற இந்தி படத்தை தயாரித்திருந்தனர். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப்பிங் செய்து ஓடிடியில் திரையிடலாம் என சிலர் யோசனை தெரிவித்தனர். ஆனால் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய ஷாருக்கான் முடிவு செய்துள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரெட் சில்லீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அலியா பட் வேடத்தில் சாய் பல்லவி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: